சிபிஎம் அழைப்பு

img

நெல்லையில் வாலிபர் சங்கத் தலைவர் அசோக் படுகொலை கண்டனம் முழங்க சிபிஎம் அழைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.